ஒரு திகிலான மனோதத்துவ தேர்வு --- விடை இதோ !!!
சிறந்த விடை: அவ்விளம்பெண் தனது தங்கையின் இறுதிச் சடங்கில் அவள் முன் சந்தித்த வாலிபன் தோன்றக்கூடும் என நம்பியதால், அக்கொலையை வேறு வழியின்றி(!) செய்தாள்.
மேற்குறிப்பிட்ட பதிலைக் கூறியவர்கள், ஒரு சைக்கோவைப் போல சிந்தித்தவர்கள் !! ஆபத்தானவர்கள் !!! இனிமேல், அவர்களிடம் (ஞானபீடம் மற்றும் அபூ முஹை) நான் எச்சரிக்கையாக இருப்பேன் ;-)
ஆண்டவனுக்கு நன்றி !!!
ஏனெனில், அமெரிக்காவில், குரூரக்கொலைகள் பல செய்த சைக்கோ கொலைகாரர்கள் ஒரு பிரபல மனோதத்துவ நிபுணர் கேட்ட இக்கேள்விக்கு இதே விடையைக் கூறினார்கள் !!!!! இந்த சிறந்த பதிலை கூறாதவர்கள் சந்தோஷப்படலாம், கூறாதது அவர்களுக்கு நல்லதும் கூட :)
என்றென்றும் அன்புடன்
பாலா
5 மறுமொழிகள்:
//*நான் எச்சரிக்கையாக இருப்பேன் ;-)*//
நம்மைப் பற்றி நாலுபேர் எச்சரிக்கையாக இருந்தால் அது நல்லதுதான்! எனக்கென்னவோ ''அதி புத்திசாலித்தனம்'' என்றும் சைக்கோ சொல்லியிருப்பார். பாலா நல்லாத் தேடிப்பாருங்கள்!
தோண்டாத கிணறு!
ஒரு கிராமத்தில் பிரபல்யமான வங்கியின் கிளை இருந்தது அந்தக் கிராமத்தில் தண்ணீருக்குத் தட்டுப்பாடு என்பதை எடுத்துச் சொல்லி, வாங்கியின் சார்பாக அக்கிராமத்திற்கு ஒரு கிணறு தோண்டி நன்கொடை செய்ய வேண்டும் என்று கிளையின் மேலாளர் வங்கியின் தலைமையகத்திற்கு எழுதி, கிணறு வெட்டவதற்கான உத்தரவையும் பெற்றார்.
கிணறு வெட்ட வங்கி ஒதுக்கிய முதலீட்டை கிளையின் மேலாளர் தன் உபயோகத்திற்கு எடுத்துக் கொண்டார். கிணறு வெட்டப்படவில்லை. ஆனால் கிணறு வெட்டப்பட்டதாக ஆவணங்கள் தயார் செய்து செலவுகளும் தலமைையகப் பார்வைக்கு வைக்கப்பட்டது. இப்போது கிளை மேலாளருக்கு வேறு ஊருக்கு மாற்றலாக உத்தரவு வந்தது. இங்கே புதிய மேலாளர் வந்து பதவியேற்றுக் கொண்டார்.
புதிய மேலாளரிடம், பழைய மேலாளர் கிணறு சமாச்சாரத்தை விலாவரியாகச் சொல்லி இதைக் கிளறி விடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டார். நீங்க போங்க எல்லாத்தையம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று புது மேலாளர் தைரியம் சொல்லி பழைய மேலாளரை அனுப்பி வைத்தார்.
கொஞ்ச நாள் கழித்து அதே கிணறு திட்டத்தை வைத்து கணிசமானத் தொகையை புது மேலாளரும் சுருட்டிக் கொண்டார் எப்படி? இதற்கு ஒரே விடைதான் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!
அன்புடன்,
அபூ முஹை
அரசுப் பணிகளில் உள்ளவர்களுக்கு மிகச் சுலபமான விடைதான் -கிணற்றை மூடுவதற்காக இவர் புதிய திட்டம் போட்டு அதை செயல் படுத்துவார்! (நான் அரசு வேலையில் இல்லை என்பதையும் கூறிக்கொள்கிறேன்;-)
//கொஞ்ச நாள் கழித்து அதே கிணறு திட்டத்தை வைத்து கணிசமானத் தொகையை புது மேலாளரும் சுருட்டிக் கொண்டார் எப்படி?
//
puthiya mElALar kiNaRai mUdi kAsu paNNittAru !!!
correct ?????
//அரசுப் பணிகளில் உள்ளவர்களுக்கு மிகச் சுலபமான விடைதான்//
//correct ?????//
சரிதான்!
குழந்தைகள் விளையாடும் இடத்தில் கிணறு இருப்பது ஆபத்து, உடனடியாக கிணற்றை மூட வேண்டும் என்று தலைமையகத்திற்கு எழுதி உத்தரவு பெற்று கிணறு சம்பந்தப்பட்ட ஃபைலை மூடினார்!
சுரேஷ், பாலா இருவருக்கும் நன்றி!
அன்புடன்,
அபூ முஹை
ithenna periya vithayaa enna.. enga ooru pakkam vanthu veeraanam thittam paththi keelunga. intha kathai solluvaanga..
anyway ippo veeranam thittam seyalpada aarambichchathum, athu nalla thittam illainnu munnala veeranam thittam konduvatnhavargaL sonnathu thaan veedikkai..
sari oru keeLvi.. nijamaagave intha varudam thanni prachinai kuraiva irunthuthaa chennaila..
anbudan vichchu
neyvelivichu.blogspot.com
Post a Comment